ஷாருக்கான், அனில்கபூர், மாதுரி தீட்சித் ஆஸ்கார் அகாடமியின் புதிய உறுப்பினர்களாக நியமனம்!
ஆஸ்கர் அகாடமியின் புதிய உறுப்பினர்களாக,பாலிவுட் திரை நட்சத்திரங்கள் ஷாருக்கான், அனில்கபூர், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
திரைப்படத்துறையில் பங்களிப்பு செய்த இந்தியர்கள் 20 பேர் உள்பட 59 நாடுகளை சேர்ந்த 928 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களாக அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. அதில், மூத்த நடிகர் நஸ்ருதின்ஷா, ஆதித்ய சோப்ரா, தபு, அலி ஃபஸால், மணிஷ் மல்ஹோத்ரா, சவுமித்ர சாட்டர்ஜி ஆகியோரும் 2018ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆஸ்கார் விருதுக்கானவர்களை இந்த உறுப்பினர்களே வாக்களித்து தேர்வு செய்வார்கள். புதிய உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாகவும், அவர்களை வரவேற்பதாகவும் பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வீடியோ வெளியிட்டுள்ளார்.