வேலைகேட்டு ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை,ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கூறிய அமைச்சர் !
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மும்பையில் வேலைகேட்டு ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், ரயில்வே பணிகளுக்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மும்பையில் ரயில்வேயில் பணி வழங்கக் கோரியும், 20 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து முழு அளவில் தங்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் பயிற்சி பெற்ற மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால், 30க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே பணிகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுவதால், அதற்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 31ஆம் தேதியே கடைசி நாள் என்பதால், அதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ள அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.