வேதியல்துறைக்கான நோபல் பரிசு பெண் உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று வேதியல்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இந்த விருதை பிரான்சஸ் அர்னால்டு , ஜார்ஜ் ஸ்மித் , கிரிகோரி விண்டேர் ஆகியோர் பெற்றனர்.வேதியல்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது இதில் பிரான்சஸ் அர்னால்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் அறிஞ்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU