வேட்டுக்கு வேட்டு வைத்த முதல் வழக்கு……பதிவானது…..பறக்கவிட பட்டதா…? உச்சநீதிமன்ற தீர்ப்பு..!!!
காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுக் காரணமாக பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதி மன்றம் கேடு விதித்தது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் அதிகளவு காற்று மாசுபடுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக பட்டாசுக்கு தடை இல்லை ஆனால் அதனை வெடிக்கும் நேரம் குறைக்கப்படுவதாக அறிவித்தது.அதன்படிஇரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த தீப்புக்கு ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் கிழக்கு டில்லி பகுதியில் பட்டாசு வெடித்த நபர் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கு தான் நாட்டிலே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய முதல் வழக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ராக்கெட் வேட்டு போல் பறக்கவிடப்பட்டதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி அம்புகளை எய்து வருகின்றனர்.
DINASUVADU