வெள்ள நகரமாக மாறிய மும்பை நகரம்..!

Default Image

கடந்த ஒருவாரமாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது.

இன்று மும்பையில் உள்ள தானே பகுதியில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.மேலும் மும்பையில் உள்ள மடுங்கா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால்இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

முன்னதாக இந்தியாவில் அதிக மழைப் பொழிவை தரும் தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருகிறது என்று தேசிய வானிலை மையம் தெரிவித்தது.

மேலும் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று தேசிய வானிலை மையம் அறிவித்தது.மேலும் மும்பை,தானே, ராய்காட் மற்றும் பல்ஹாரில் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்