வெள்ளத்தில் மீண்ட கேரளாவை அடுத்து தாக்கும் “எலி”க்காய்ச்சல்..!!302 பேர் பாதிப்பு..!10 பேர் பலி..!!அதிர்ச்சியில் கேரளா..!!
கேரளாவே வெள்ளம் புரட்டி போட்ட தடம் மறைவதற்குள் அடுத்து மக்களை மறைய வைக்க வந்துள்ளது எலிக்காய்ச்சல்.மழைக்கு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது கேரளத்தில் ஆகஸ்டு 1 முதல் செப்டம்பர் 2 வரை எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 302பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் பருவமழைக் காரணமாகவும் ஒருவகை பாக்டீரியாவால் எலிக்காய்ச்சல் பரவி வருவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது.
மேலும் 719பேர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU