வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருமாவளவன் ரூ. 15 லட்சம் நிதி உதவி ..!!!
கேரளாவில் ஏற்பட்ட மலை வெள்ளத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளா மக்களுக்கு மாநில அரசுகள், திரையுலக நடிகர்கள் என பலரும் உதவி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் ரூ.15 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து காசோலையை திருமாவளவன் வழங்கியுள்ளார்.