Categories: இந்தியா

வெளிநாட்டில் உயிருடன் இருக்கும் விடுதலை புலிகளின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான்!பகீர் தகவலை கூறிய சு.சுவாமி

Published by
Venu

இத்தாலியில் விடுதலை புலிகளின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான்  உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜிவ் கொலையில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை தொடர்பாக பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் மேலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார். பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் தான் நேற்றைய தினம் முழுவதும் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

சுப்ரமிணியன் சுவாமி கூறுவது யாரை? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்க அதற்கு வலு சேர்க்கும் விதமாக  சில முக்கிய தகவல்கள் கசிந்து வருகின்றன. விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உளவுத்துறையின் தலைவருமான பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல்கள் மீண்டும் வெளிவர தொடங்கி உள்ளன

பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்… இலங்கை உள்நாட்டு போரின் போது விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் பொட்டு அம்மானும் ஒருவர் என்றது இலங்கை ராணுவம். இறுதிப்போரின் போது அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், கப்பற்படை தளபதி சூசை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி போன்ற முக்கியமானவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அறிவித்த இலங்கை ராணுவம் அதற்கு சாட்சியாக அவர்களின் உடலையும் காட்டியது.

ஏன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு சாட்சியாக கூட உடல் ஒன்றின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது இலங்கை ராணுவம்… ஆனால் இன்று வரை இலங்கை அரசால் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்பதற்கான எந்த வித ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை… அதற்காக இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் விடுதலை புலிகளின் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது” என எச்சரிக்கை விடுத்து, தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்தது இண்டர்போல். ஆனால் அப்போதும் பொட்டு அம்மான் இறந்து விட்டதாகவே சாதித்தது இலங்கை அரசு…

இந்த நிலையில் இத்தாலியில் உயிரோடு இருக்கிறார் பொட்டு அம்மான் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. ஏற்கனவே பிரபாகரன் கொல்லப்படவில்லை என உறுதியாக நம்பி இருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு பொட்டு அம்மானும் கொல்லப்படவில்லை என செய்தி கசிய தொடங்கி இருப்பது, ஆதரவான விசயமாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச போலீசார் சொல்வது உண்மை எனில், சுப்ரமணியன் சுவாமியின் ட்விட் பொட்டு அம்மானை பற்றியது எனில், இலங்கையின் ஈழ விடுதலை போர் முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடவில்லை என்பதே நிதர்சனம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Published by
Venu

Recent Posts

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

29 minutes ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

54 minutes ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

1 hour ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

2 hours ago

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

2 hours ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

2 hours ago