வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட்….!
வெற்றிகரமாக போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து நேற்று, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் – 1ஐ செயற்கைக்கோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
போக்குவரத்து, கண்காணிப்பு வசதி உள்ளிட்ட சேவைகள் வழங்குவதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக்கோள்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்ற நம்பிக்கை இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நேவிகேஷன் தொழில்நுட்பத்தில் இதுவரை பெறாத வசதிகள் இனி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.