வெறும் 10000 ரூபாய்க்கு ஓஎல்எக்ஸ்ல் காங்கிரஸ் அலுவலகம் விற்பனை!அதிர்ச்சியில் காங்கிரஸ்
பத்தாயிரம் ரூபாய்க்கு கேரள காங்கிரசின் தலைமை அலுவலக கட்டிடம் விற்கப்படுவதாக ஓஎல்எக்ஸ் விற்பனை தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 30-ஆம் தேதி முடிகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கான ஒரு எம்பி சீட், கேரள எம் காங்கிரசுக்கு (Keral Congress (M) வழங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், திருவனந்தபுரம் – சாஸ்தாமங்கலத்தில் இந்திரா பவன் என்ற பெயரில் உள்ள காங்கிஸ் கட்சியின் தலைமை அலுவலகம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு தயாராக உள்ளதென ஓஎல்எக்ஸ் விற்பனைத் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அனீஷ் என்பவர் செய்துள்ள இந்த விளம்பரத்தில், கேரள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை வாங்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்லது கேரள காங்கிரசை அணுகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.