"வெறும் 1.8 சதவீத வாக்குப்பதிவு"ஜம்மு காஷ்மீர் 3 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில்…!!
ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரமுல்லா மாவட்டத்தில் 75.3 சதவீத வாக்குகளும், சம்பாவில் 81.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அனந்தநாக்கில் 3.2 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஸ்ரீநகரில் வெறும் 1.8 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
DINASUVADU