வெயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாக காரணமா?கடும் சர்சையை கிளப்பிய தேர்தல்
தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வரும் இடைத்தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படாமல் போனதற்கு கடுமையான வெயில் காரணம் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.எதிர்கட்சிகள் தேர்தல் தில்லுமுல்லு நடைபெறுவதாக புகார் கூறியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் கைரனா, மகாராஷ்டிரத்தின் பால்கர், பண்டாரா-கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பண்டாரா-கோண்டியா தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜக எம்பியாக இருந்த நானா படோல் அக்கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து காங்கிரஸில் இணைந்தார். தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ததால் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் ஹேமந்த் படோல் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் கடந்த முறை பாஜகவிடம் தோல்வியடைந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல். இவர் பலமுறை அங்கு வெற்றி பெற்றவர். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. தேசியவாத காங்கிரஸ் சார்பில் மதுகர் போட்டியிடுகிறார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்த தொகுதியில் பாஜகவிற்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் அந்த தொகுதியில் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் ஏராளமான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. பல மணிநேரத்திற்கும் பிறகும் அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளறு நீடித்ததால், வாக்குப்பதிவு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த பகுதியில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டு வழங்கும் வகையில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால்,40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் இதற்கு பிரபுல் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படாமல் போனதற்கு அதிகாரிகள் கூறும் காரணம் விநோதமாக உள்ளது. கடுமையான வெயிலில் இயந்திரங்கள் செயல்படாது என்றால் பிறகு ஏன் இப்போது தேர்தல் நடத்துகிறார்கள். வெயில் குறைந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டியது தானே. ஆளும் பாஜகவின் துணையுடன் இந்த தொகுதியில் தில்லுமுல்லு வேலைகள் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு துணைப்போவது கண்டிக்கத்தக்கது’ எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.