வெடி வைத்து இடித்து நொறுக்கப்பட்ட கட்டிடம்-விதிமீறலுக்கு தக்க தண்டனை

Default Image
  • கொச்சியில் வெடி வைத்து இடித்து நொறுக்கப்பட்ட கட்டிடம்.
  • விதிமீறி கட்டப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி இடித்து அகற்றம்.

கொச்சியில் மராடு அருகே 19 மாடிகளை கொண்ட ஹோலி பெய்த் மற்றும் 16 மாடிகளைக் கொண்ட ஆல்பா செரின் அதேபோல் தலா 17 மாடிகளை கொண்ட ஜெயின் கோரல் கோவ் கோல்டன் காயலோரம் உள்ளிட்ட 4 அபார்ட்மென்டுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த நீதிபதிகளான அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வானது பலகட்ட விசாரணைக்கு பிறகு  4 கட்டிடங்களையும் இடித்து தள்ளி அகற்ற  கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசிற்கு உத்தரவிட்டது.

Image

ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தது இந்த மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கு வீடு வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்ற வீதத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள்  கூறினர்.

Image

இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்றும் பொருட்டாக கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை கடந்த அக்டோபர் 18 தேதி முதலே கேரள அரசு மேற்கொண்ட நிலையில் வெடிவைத்து தகர்ப்பதற்கான வேலைகள் கடந்த ஒரு மாத காலமாக அவற்றில் வெடி மருந்துகளை நிரப்பும் பணியானது நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த அனைத்தும் முடிந்த நிலையில் பணிகள் முடிந்ததை தொடர்ந்து 2 கட்டிடங்களை நேற்று இடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று பகல் 11.17 மணி அளவில் எச் 2 ஓ ஹோலி பெய்த் கட்டிடம் வெடிவைத்து முதலில் தகர்க்கப்பட்டது. பின் சில நிமிட இடைவெளியில் ஆல்பா செரீன் கட்டிடமும் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது.கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது வெளிவந்த புழுதிகளை தண்ணீர் பீய்ச்சிக் கட்டுப்படுத்தப்பட்டது.

Image

அதனைத்தொடர்ந்து இன்று காலை சரியாக 11 மணிக்கு ஜெயின் கோரல் கோவ் மற்றும் கோல்டன் காயலோரம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்ததாக இடிக்கும் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்றிய எடிபிஸ் என்ஜினீயரிங் நிறுவன இயக்குனர் உத்கார்ஷ் மேத்தா கூறியுள்ளார்.மேலும் இடிக்க  கட்டிடங்களில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் அனைவரும்  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடிக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் 1,600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்