வீரமரணமடைந்த வீரர்களின் உடல்களுக்கு மரியாதை..!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனையடுத்து வீரமரணடைந்த பாதுகாப்பு படை வீரரின் உதவி கமாண்டன்ட் ஜிதேந்திரா சிங், சப் இன்ஸ்பெக்டர் ரஜனீஷ் குமார், ஏஎஸ்ஐ ராம்விவாஸ் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ்ராஜ் குர்ஜார் ஆகியோரின் உடலுக்கு சக வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.