ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிங்களில் விவசாயிகள் விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்பாமல் இருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை, வேளாண் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் பேசியபோது, ஐந்நூறுபேர், ஆயிரம்பேர் சேர்ந்து ஒரு சங்கம் வைத்துக்கொண்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளார். விளைபொருட்களை விற்காவிட்டால் விவசாயிகளுக்குத் தான் இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதாக அளித்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…