விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி இன்று பேச்சுவார்த்தை …!
தற்போது நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து கூட்டணி ஆட்சியில் முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி.
கர்நாடக மாநில விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்வது தொடர்பாக, அம்மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் குமாரசாமி புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். விவசாயக் கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன்; இல்லாவிட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று ஏற்கெனவே குமாரசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.