விவசாயிகள் இமாச்சலப்பிரதேசத்தில் போராட்டம்!
மாநில அரசைக் கண்டித்து இமாச்சலப் பிரதேசத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அம்மாநிலத்தில் அனைத்து சிறு விவசாயிகளுக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தலைநகர் சிம்லாவில் உள்ள தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஏராளமானோர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.