விவசாயக் கடன் தொகையில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் : குமாரசாமி..!
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் இதற்கான நிதியாதாரத்தைப் பெற மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி, 85 லட்சம் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களைத் தீர்க்க உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். கடன் தொகையில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் குமாரசாமி கோரியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், மத்திய அரசின் ஆதரவை நாடியிருப்பதாக கூறினார். வறட்சி காரணமாக விவசாயிகளின் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று கூறிய குமாரசாமி கூட்டணியில் ஏற்பட்ட இழுபறிகளால் கடன் தள்ளுபடி தாமதமாவதாக கூறினார். முன்னதாக கடன்களைத் தீர்ப்பதற்காக விவசாய சங்கங்களிடம் அவர் 15 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.அந்தக் காலக்கெடு முடிவுக்கு வந்த பிறகும், மத்திய அரசின் தயவை கர்நாடக அரசு நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.