விவசாயக்கடன் தள்ளுபடியா.? இன்று பட்ஜெட் தாக்கல்..!
நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , தமிழ்நாட்டுக்குத் தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.அது தமிழகத்துக்கு கிடைத்த மகிச்சியான செய்தியாகும்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவைத்துள்ளார்.இந்த பட்ஜெட் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் ஆகும்.இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் , ஓய்வூதியம் , தொழில்மேம்படு மற்றும் புதிய திட்டங்கள் பல அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது குறித்து பேசுவதாகவும் முதல்கட்டமாக 2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியம் திட்டத்தில் முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ,வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் , வட்டியில்லாக்கடன் போன்ற திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.