ஆந்திராவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்…!! பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் உலகின் முதல்நிலை வீரராக தேர்வு…!!
பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் முதல் நிலை வீரராக சர்வதேச பேட்மின்டன் கழகம் அறிவித்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியதன் மூலம் 76 ஆயிரத்து 895 புள்ளிகள் எடுத்து உலகில் முதல் நிலை வீரராக உள்ளார். இதற்கு முன் முதல் நிலை வீரராக இருந்த டச்சு நாட்டு வீரரான விக்டர் அக்ஸல்ஸனுக்கு ஆயிரத்து 660 புள்ளிகள் குறைந்ததால் ஸ்ரீகாந்த் முதலிடத்தை பெற்றார்.