Categories: இந்தியா

விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் பங்கு முடிவை ரத்து செய்தார் அரியானா முதல்வர்..!

Published by
Dinasuvadu desk
அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு துறையை மேம்படுத்தும் ஒரு பகுதியாக அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டது.
விளம்பர வருவாய், தொழில்முறை போட்டிகளில் வரும் வருமானத்திலும் பங்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விளையாட்டு துறையின் இந்த உத்தரவை அம்மாநில முதல்வர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதியிட்ட அந்த அரசு உத்தரவை நிறுத்தி வைக்க தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது.
இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Recent Posts

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

12 mins ago

“மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார்”! செந்தில் பாலாஜியை சந்தித்த பின் கே.என்.நேரு பேட்டி!

சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…

25 mins ago

‘எப்படி இருக்க?’ .. செந்தில் பாலாஜியை கண்கலங்கி நலம் விசாரித்த எம்.பி ஜோதிமணி!

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…

46 mins ago

செப் – 30 திங்கட்கிழமை இங்கெல்லாம் மின்தடை! நோட் பண்ணிக்கோங்க மக்களே..

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

1 hour ago

உறவுகளை நினைவூட்டும் “மெய்யழகன்” ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…

1 hour ago

INDvsBAN : மழையால் முடிந்த முதல் செஷன்! வலுவான நிலையில் வங்கதேச அணி?

கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…

1 hour ago