விராட் கோலி பிரதமர் மோடி-தோனிக்கு சவால்..!
உடற்பயிற்சி தொடர்பாக, பிரதமர் மோடி, மகேந்திரசிங் தோனி, தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், புஷ் அப் எடுக்கும் காட்சிகளை வெளியிட்டு, இதுபோன்று உடற்பயிற்சி செய்யும்படி விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தாம் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டதுடன், இதேபோல், உடற்பயிற்சி செய்யும்படி, பிரதமர் மோடி, தோனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்