விப்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு செவாலியர் விருது அறிவிப்பு..!!!
இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல ஐ.டி நிறுவனங்களுள் முதலவதாக தேர்வு செய்யப்படும் நிறுவனம் விப்ரோ இந்த நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் தம் இளம் வயதில் எண்ணெய் நிறுவன தலைவராக தன் பணியைத் தொடங்கியவர்.மேலும் இன்று நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.
இந்நிலையில் இவருக்கும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா நாட்டை மேம்பாடு அடைய இவர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் விதமாகவும் மற்றும் ஏழை,எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறக்கட்டளை பொன்றவற்றை அமைத்து அதன் முலம் உதவி வருகிறது.இந்த உதவும் மனப்பான்மையை போற்றும் விதமாகவும் இந்நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட இருப்பதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த விழாவானது பெங்களூருவில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு இந்த செவாலியர் விருதினை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டரே ஜிகிலர் வழங்கி கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.