Categories: இந்தியா

விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை…இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்…!!

Published by
Dinasuvadu desk
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,423 கிலோ எடை கொண்ட, ஜிசாட் 29 செயற்கைகோளுடன், ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., தொலைவில் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:
சந்திராயன் – 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும். செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் பெற்றிருப்பதை இது உறுதி செய்கிறது.ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்.ஜம்மு – காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியா பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த இந்த செயற்கைகோள் உதவும். 2020-ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

7 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

9 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

14 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

35 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

35 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

47 mins ago