விண்ணை நோக்கி சிறீப்பாய்ந்த அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி..!!
அணு ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியதும், நீண்ட துாரம் வெகமாக பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய திறன் உடைய அக்னி – 4 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடந்தப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சண்டிபூரில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் சோதனை மைய தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.இந்த ஏவுகணையானது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில்அக்னி – 4 ஏவுகணை சோதனை நடந்தது.
இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஆனது இரண்டு நிலை திட எரிபொருளால் இயங்ககூடியது.ஏவுகணையானது 1௦ மீட்டர் நீளமும், 18 டன் எடையும் உடையது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று 4,000 கி.மீ துாரம் வரை பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடையது.
இந்நிலையில் இந்த ஏவுகணையானது திட்டமிட்ட இலக்கை கச்சிதமாக தாக்கியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்களை வைத்து அக்னி – 4 ஏவுகணை வடிவமைக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.