விஜய் மல்லையா , அருண்ஜெட்லி விவகாரம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது…!!

Default Image

விஜய் மல்லையா அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறியதை பெரிது படுத்தும் காங்கிரஸின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது.

Image result for சிவசேனா

இது குறித்து அதன் கட்சிப்பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தச் சர்ச்சைகளே 2019 லோக்சபா தேர்தலுக்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான ஒரு பகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒரு வார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக்குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாகக் கூறியதாகத் தெரிவித்தார்.

மல்லையா போன்ற ஒரு பொய்யரின் கூற்றை வைத்துக் கொண்டு எந்த அடிப்படையில் அருண் ஜேட்லியை சந்தேகிக்க முடியும். காங்கிரஸ்தான் அதைச் செய்தது. சில ஆயிரம் கோடி ரூபாய்கள் வங்கிக் கடனை மோசடி செய்து விட்டு லண்டனில் நாடுகடுத்தும் வழக்கைச் சந்தித்து வருகிறார்.

Image result for விஜய் மல்லையா , அருண்ஜெட்லி

வாராக்கடன்களில் சிக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 16. இந்த வங்கிகளிலிருந்து கடன் பெற்றவர்கள் அனைவரும் பண முதலைகள். இதில் மல்லையாவும் ஒருவர்.

அவர் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று கூறியதை வங்கிகள் ஏற்கவில்லை, இதனையடுத்து அருண் ஜேட்லியை மாநிலங்களவைக்கு வெளியே சந்தித்துள்ளார், ஒரு எம்.பியாக அங்கு சுற்ற அவருக்கு உரிமை உள்ளது. இதை வைத்துக் கொண்டு அருண் ஜேட்லியையும் குற்றவாளி என்று காங்கிரசின் பூனியா கூறுவது முழுதும் முட்டாள்தனமானது.

Related image

காங்கிரஸும், பாஜகவும் வைத்திருக்கும் எம்.பி.க்களின் லட்சணம் இதுதான், அமைச்சர்களுக்கே யாரைச் சந்திக்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏமாற்றியது மல்லையா மட்டுமல்ல, இன்று பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடத்தான் நிரவ் மோடி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. எனவே ராகுல்காந்திதான் நிரவ் மோடி தப்பிக்கக் காரணம் என்று கூற முடியுமா?

இவ்வளவு ஆண்டுகள் கழித்து மல்லையா இதனைத் தெரிவிக்கிறார், ஜேட்லி-மல்லையா சந்திப்பு முன்னரே தெரியுமென்றால் காங்கிரஸ் ஏன் இத்தனை நாட்களாக வாயை மூடிக் கொண்டிருந்தது?

Image result for 2019 தேர்தலுக்கான

அல்லது மல்லையாவின் பின்னால் யாரோ அவரை இயக்கி இத்தகைய கூற்றுகள் அவரிடமிருந்து வருகிறதா? இவையெல்லாமே 2019 தேர்தலுக்கான தயாரிப்புகளே. விரும்பத் தகாதவர்களை நீக்கி விடுவதற்கான முயற்சி, இப்போது ஜேட்லிக்கு இது நடந்துள்ளது.இவ்வாறு அருண்ஜெட்லி விவகாரத்தில் பிஜேபிக்கு ஆதரவாக காங்கிரஸ்ஷை சிவசேனா சாடியுள்ளார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்