வாரணாசியில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி தோற்பார் …!ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோல்வி அடைவார் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போது உத்தரப்பிரதேசம், பீகாரில் அண்மையில் நடைபெற்ற மக்களவை இடத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தியதாக குறிப்பிட்டார். மூன்றாவது அணிக்கு தற்போது அவசியம் இல்லை என்று கூறிய ராகுல், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற எதிர்கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.