வாஜ்பாய் உடல்நிலையில் திடீர் பின்னடைவு..!நேரில் சென்று நலம் விசாரித்தார்..!ராஜ்நாத் சிங்..!
தீவிர அரசியலில் இருந்து விலகி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில், கடந்த ஜுன் மாதம் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நேற்று அவரின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர், நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ,உடல்நிலை பற்றியும் வாஜ்பாயின் உறவினர்களிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்