வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது…பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம்…!!
தெலுங்கானா மாநிலத்துக்கு வருகின்ற 7-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் தெலுங்கானா நிசாமாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.அப்போது பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் , பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தெலுங்கானா மாநிலமாக நமக்கு கிடைத்துள்ளது.நம்முடைய தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் என்ன சாதனை செய்தார் என்று தேர்தல் முடிவில் தெரியும் என்று பிரதமர் பேசினார்.
காங்கிரஸ் கட்சி தேர்தலில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெற்றி பெற விரும்புவது போல தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவும் நாமும் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள் , மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் பேசினார்.
dinasuvadu.com