வாக்களிக்க இனி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் அனுமதி?
தேர்தல் ஆணையம்,வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கூடுதலாக ஒரு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் வாக்களிக்க அனுமதிக்கும் நியுசிலாந்து முறையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்று சில அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். இது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.