வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகையுடன் வாகனங்களை வழங்கும்…!
மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவெண் பலகைகளுடன் கூடிய வாகனங்களை வழங்குவது விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இப்போது விற்பனையாகும் வாகனங்களுக்கு அதை வாங்குபவரே போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்த பின் பதிவெண் பலகையைத் தனியாக விலை கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டியுள்ளது. எண்ணூறு ரூபாய் முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை விலையுள்ள பதிவெண் பலகைகள் உள்ளன. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே பதிவெண் பலகைகளை வாகனங்களில் பொருத்தி வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.