வலுக்கட்டாயமாக மது கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: உறவினர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு!

Default Image
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவரை அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 30-ந்தேதி கொடுவள்ளியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த கடையின் மாடியில் வைத்து அந்த இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்தனர். போதையில் மயங்கிய அந்த இளம்பெண்ணை அவர்கள் 6 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து கொடுவள்ளி போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.
அதன்பேரில் கடந்த 24-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை கற்பழித்த 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணுக்கு உறவினர்களே மது கொடுத்து கற்பழித்த சம்பவம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala