வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் : தலாய் லாமா…!!
வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என மும்பை நிகழ்ச்சியில் தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, சுமார் 15 ஆண்டுகளுக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை பேட்டி எடுத்தபோது, வருங்காலத்தில் ஒரு பெண் தலாய் லாமா உருவாவது சாத்தியமா? என கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தான் ஆமாம் என்று பதிலளித்தையும் குறிப்பிட்டார்.
வரும் காலத்தில் பெண்கள் அமைப்பு வலுப்பெறும் போது அது நிச்சயமாக நடக்கும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் புத்த மத பாரம்பரியம் மிகவும் சுதந்திரமானது என்றும், ஆண், பெண் இருபாலருக்கும் புத்தர் சம உரிமை கொடுத்தார் எனவும் அவர் தெரிவித்தார்.