வட மாநிலங்களில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை!
இரண்டு சிறுமிகள் சட்டீஸ்கர்,உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, 25 வயது உத்தம் சாஹூ என்ற இளைஞர், பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.
அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் Etah மாவட்டத்தில் நடந்த மற்றொரு திருமண நிகழ்வில், 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக Pintu என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.