போலீசாரின் என்கவுன்ட்டரில், மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி (gadchiroli)மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எடபள்ளி போரியா (etapalli boriya) வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் போலீசாருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் உயிரிழந்தனர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படும் இதில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலரும் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நக்சலைட்டுகளின் இயக்கங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக கருதப்படும் பீடி இலைகள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணத்தை வாங்க நக்சலைட்டுகள் ஏராளமானோர் அங்கு திரண்டிருப்பதை அறிந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.