வடமாநிலங்களில் தொடரும் கடும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான சேவைகளும் பாதிப்பு !
உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கடும் பனிமூட்டமும், குளிரும், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
பொழுது விடிந்து வெகு நேரமாகியும், வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக, ரயில் மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று, பனிமூட்டம் காரணமாக, 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 39 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 4 ரயில்களின் நேரம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி லோதி சாலையில், காற்றின் தரமும் குறைந்து காணப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.