வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை! 40 பேர் பலி!28 பேர் படுகாயம்!
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 40 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ், கான்பூர், ரேபரேலி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் மழை கொட்டியது. அப்போது இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதேபோல் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
இதனால் அங்கு 31 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி 28 பேர் படுகாயம் அடைந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.