வங்கி மோசடியில் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ்!

Default Image

வங்கி மோசடியில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப சர்வதேச போலிசிடம்  (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. .

முன்னதாக  வைர தொழிலதிபர் நிரவ் மோடி, வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான நிலையில் பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில்,சர்வதேச போலிசை (இண்டர்போல்) நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வினியோகிக்க  சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும் என்பதாகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Madurai Airport Protest
MTC - Train Cancelled
Kasthuri Arrest
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara