வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் என்னாச்சு..!
திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதா சகல விதமான சாகசங்களையும் செய்தது என்பது எடியூரப்பா செய்த தன் மூலம் நிருபணமாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற மத்திய அரசு இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக கல்விக் கொள்கைகளை பா.ஜனதா அரசு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வருகிறது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் நிலவுகிறது. இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி தேர்தலின் போது அறிவித்த ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை மீட்டு அனைத்து பொதுமக்கள் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அவை வெற்று வாக்குறுதிகளாக அமைந்துவிட்டன.
எனவே ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் மோடி அரசை அகற்ற மத சார்பற்ற ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகள் ஒன்று சேர வேண்டும். தமிழகத்திலும் இயங்கும் அ.தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.