கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் தலைவரான ஏடிஜிபி சுதேஷ் குமாரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் கவாஸ்கர். இவர் சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர்.
இந்நிலையில், நேற்று காலை அதிகாரி சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வாக்கிங் சென்றபோது, கார் வருவதற்கு தாமதம் ஆனது. இதனால் டிரைவர் கவாஸ்கரை அதிகாரியின் மகள் திட்டியுள்ளார். தன்னை திட்டவேண்டாம் என டிரைவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அதிகாரியின் மகள், டிரைவரை தன் செல்போனால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கவாஸ்கர் மாவட்ட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுதொடர்பாக டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரியின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எதிர் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கவாஸ்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…