‘லவ் ஜிஹாத்’ – வதந்தியை நம்பி திருமண ஜோடிகளை பிடித்து சென்ற போலீசார்! கொதித்தெழுந்த உறவினர்கள்!

Default Image

உத்திரப்பிரதேசத்தில் குசி நகரில், அந்த ஊரை சேர்ந்த முஸ்லிம் மணமகன் ஹைதர் அலி என்பவருக்கும், மணமகள் ஷபீலா என்பருக்கும் திருமண நிச்சயம் செய்தனர். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும், நடைபெற்று வந்த , குசிநகர் போலீசாருக்கு யாரோ ஒருவர் அலைபேசி மூலம் ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி முஸ்லிம் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளனர்.

இதனையடுத்து கோபத்துடன் விரைந்து வந்த உத்திரப்பிரதேச போலீசார், மணமகளையும், மணமகனையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். உண்மை என்ன என்று விசாரிக்காமல், உறவினர்கள் கூறியதையும் கேட்காமல், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் மாப்பிள்ளையை அழைத்து சென்று அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் சராமரியாக பெல்ட்டாலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று போலீசாருக்கு தெரியவில்லை. உறவினர்கள் சொல்லியும் ஏற்க மறுத்த போலீசா,ர் மணமகள் வீட்டார் வீடியோகால் மூலம் போலீசாரிடம் பேசி, தாங்களும் முஸ்லிம் தான் என்பதை நிரூபித்து, ஆதார் அடையாளங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதன்பின்தான் போலீசார் தாங்கள் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டனர். இதனையடுத்து போலீசார் மாப்பிள்ளை, பெண்ணை விடுவித்தனர். தங்கள் யாரையும் அடிக்கவில்லை என்றும், பொதுமக்கள் முன்னிலையில் தான் மணமகன் மணமகள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மணமகன் கூறுகையில்,  தன்னையும், ஷபீலாவையும் போலீசார் தனி அறையில் அடைத்து அடித்ததாகவும், தங்களது மத அடையாளத்தை காட்டுமாறு கூறியதாகவும் மணமகன் ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இருவரும் மத அடையாளங்களை கூறியும் போலீசார் விட வில்லை. மாறாக ஷபீலா வீட்டிலிருந்து யாராவது வந்து அடையாளத்தை நிரூபித்தால் தான் விடுவோம் என்று சொன்னதாகவும், இதனையடுத்து ஷபீலாவின் அண்ணன் விரைந்து வந்து, தனது தங்கையையும், தன்னையும் அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்