"லஞ்சம் கொடுத்தால் தான் எல்லாம் நடக்கும்" 56 % மக்கள் ஒப்புக்கொண்டனர்..!!

Default Image
56 சதவீத இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பதுதான் வேலை நடக்க ஒரே வழி என்று ஒப்புக்கொண்டு உள்ளனர். இது புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலேயே ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
‘தி டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ அமைப்பின் இந்தியக் கிளை நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊழல் தொடர்பான ஆய்வை நடத்தியதில் இந்திய அளவில் அதிகம் லஞ்ச, ஊழல் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
15 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான கேள்விகள்  கேட்கப்பட்டன. அதற்கு ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்த பதில்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில், ஆய்வில் பங்கேற்ற 59 சதவிகிதம் பேர் தங்களின் பணி முடியவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பஞ்சாப்பில் இது 56 சதவிகிதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52% பேர் அரசு சேவையைப் பெற லஞ்சம் தர வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் சொத்து பதிவு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பதிவு  விஷயங்களுக்கு அதிகமான லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதன்பின் போலீஸ் மற்றும் மாநகராட்சி நிறுவனம் ஆகிய இடங்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டது .
56 சதவீத  இந்தியர்கள் லஞ்சம் கொடுப்பது வேலை நடக்க ஒரே வழி என்று ஒப்புக் கொண்டனர். கடந்த் வருடம் 45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகியவை மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களாக மாறிவிட்டன. குஜராத், கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவை  குறைந்த ஊழல்  மாநிலங்கள்.
தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44% ஊழல் இத்துறையில்தான் நடப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக 17% ஊழல் காவல்துறையிலும், 15% ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25% ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அலுவலகங்கள் கணினிமயமாக்கல் செய்யப்பட்டது ஊழல்களைக் குறைப்பதற்கு உதவவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தாங்கள் லஞ்சம் வழங்கும் அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டவையாக இருந்தாலும் அங்கு சிசிடிவி இல்லை என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்குவது கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவது அதிகரித்துள்ளது.
நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப்படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ்களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஜூலை மாதம் பாராளுமன்றம் ஊழல் தடுப்பு சட்டம் (திருத்தச்) சட்டத்தை 2018-ல் நிறைவேற்றியது. இது லஞ்சம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும்  ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிசெய்கிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்