ரூ. 60,000,00,00,000 "மக்கள் பணம் காலி"அனில் அம்பானிக்கு கொடுக்கும் மத்திய அரசு
இந்தியாவை ரிலையன்ஸ் குழுமத்திற்கு அடகுவைக்கும் வேலையில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ. 40 ஆயிரம் கோடியையும், எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் ரூ. 29 ஆயிரம் கோடியையும் ரிலையன்ஸூக்காக அள்ளிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பாஜக அரசு தன்பங்குக்கு, மகாராஷ்டிர தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) நிதி ரூ. 60 ஆயிரம் கோடியை, ரிலையன்ஸ் வசம் ஒப்படைத்துள்ளது. அதாவது, இந்த நிதியை ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான் மேலாண்மை செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி அள்ளிக் கொடுத்துள்ளது.
இத்தகவலை ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனமே அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.“மகாராஷ்டிர மாநில தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் நிதி ரூ. 60 ஆயிரம் கோடியை நிர்வகிக்கும் பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது; இதுபோல ஒரு மாபெரும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்; இந்த நிதியை சரியானபடி முதலீடு செய்து, நல்ல வருமானம் கிடைக்க நாங்கள் பாடுபடுவோம்” என்று ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் சிக்கா மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநில நிதி மட்டுமன்றி, ஏற்கெனவே, வேறுபல மாநிலங்களின் இஎஸ்ஐ நிதிகளும் ரிலையன்ஸ் நிப்பான் காப்பீட்டு நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில், ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மையில் விடப்பட்டுள்ள தொழிலாளர் காப்பீட்டு நிதி மட்டும் ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
DINASUVADU