ரூ 5,00,00,00,000…தண்ணீருக்காக வழங்கும் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை…!!

Default Image

மராட்டிய மாநில அரசுக்கு, வட்டியில்லா கடனாக 500 கோடி ரூபாயை வழங்குகிறது ஷிரடி சாய்பாபா அறக்கட்டளை. வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. கிராம மக்கள் தண்ணீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் வரை நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, கோதாவரி ஆற்றில் இருந்து, மரத்வாடா பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, இந்த திட்டத்தை அரச கிடப்பில் போட்டது.
இந்நிலையில், விவசாயிகள் பயன் பெறும் வகையிலான இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்க, ஷிரடி அறகட்டளை முன்வந்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை மராட்டிய அரசுக்கு வட்டியில்லா கடனாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
திட்டத்தை செயல்படுத்திய பிறகு மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை திரும்பி செலுத்தலாம் என அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்