மத்திய அமைச்சரவை ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுஷ்மன் பாரத் என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆயுஷ்மன் பாரத் என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண்களை தலைவராக கொண்ட குடும்பத்தினர், உடல் ஊனமுற்றோர், எஸ்சி, எஸ்டி இனத்தவர், பிச்சை எடுப்போர், நிலம் மற்றும் வீடு இல்லாதவர்கள், சட்டரீதியாக விடுவிக்கப்பட்ட ஊரக பகுதியில் வசிக்கும் கொத்தடிமைகள் என 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடைவார்கள். பாதிக்கப்படும் குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தை மருத்துவ காப்பீடாக பெற முடியும். நோயாளிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித ரொக்க பரிமாற்றமும் இன்றி சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…