ரூ 4,991,00,00,000 , "மத்திய அரசின் விளம்பர செலவு"கடந்த ஆட்சியை விட 2 % உயர்வு..!!
மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை கேட்டு மனு அனுப்பி இருந்தார்.அதில் ,மோடி தலைமையிலான ஆட்சியான கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்திற்க்காக செலவழித்த தொகை எவ்வளவு ? என்று அதில் கேட்டிருந்தார்.அதற்க்கு தற்போது பதிலளித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ” கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018_ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் மின்னணு ஊடக விளம்பரத்திற்கு என்று ரூபாய் 2,208 கோடியும் ,அச்சு உடைக்க விளம்பர செலவு என்று ரூபாய் 2,136 கோடியும் மற்றும் வெளிப்புற விளம்பரம் என்ற பெயரில் ரூபாய் 647 கோடியும் செலவிடப்பட்டுள்ள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மொத்த செலவு தொகை ரூபாய் 4991 கோடி ஆகும்.தற்போது எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளதால் பிஜேபி அரசுக்கு கூடுதல் சிக்கல் வந்துள்ளது.
DINASUVADU