கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிச் சென்ற தங்க டிபன் கேரியர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.முபீம், கவுஸ் பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மியூசியத்தில் இருக்கும் தங்க தகடு பொருத்தப்பட்ட குரானையும் அவர்கள் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், அந்த டிபன் கேரியரை திருடிச் சென்றவர்கள், அதில் உணவு சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவிக்கையில், ` 2 கிலோ எடையுடைய இந்த தங்க டிபன் கேரியரின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். பழமையான பொருள் என்பதால் துபாய் சந்தையில் ரூ. 30 முதல் 40 கோடி வரை விலைபோகலாம்’ என்றார்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…