பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க இருக்கின்றன. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சுமார் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இருநிறுவனங்களும் நாடு முழுக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய இந்த தி்ட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ஏர்டெல் சேவையில் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும்
ஏர்டெல் மற்றும் அமேசான் வழங்கும் ரூ.2600 கேஷ்பேக் பெறுவது எப்படி?
– அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். இவற்றில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.
– ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.
– இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.
– அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge – முகவரியை பயன்படுத்த வேண்டும். இனி ரூ.25 மதிப்புள்ள கேஷ்பேக் தொகை 24 மாதங்களில் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.
ஏர்டெல் வழங்கும் ரூ.169 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சில 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.