கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 25 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்ட நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து, பேரிடர் நிவாரண நிதியாக 2 ஆயிரத்து 683 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்றதாக கூறினார். இந்தநிலையில் பெருவெள்ளத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக 33 கோடியே 79 லட்சம் ரூபாயை கட்டணமாக விமான படை கோருவதாக சுட்டிக் காட்டிய பினராயி விஜயன், இதேபோல் ரேசன் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்ததற்காக, மத்திய அரசு 290 கோடி ரூபாய் கேட்பதாக தெரிவித்தார்.இந்த இரண்டையும் உள்ளடக்கி மீட்பு , நிவாரண பணிகளுக்கு 323 கோடி 79 லட்சம் ரூபாயை மத்திய அரசு கேட்கிறது என்று வேதனை தெரிவித்த கேரள முதல்வர் கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை முதலில் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
dinasuvadu.com
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…