ரூ 31,00,00,000 போச்சு…சபரிமலை போராட்டத்தால் 13 நாட்களில் வருமானம் குறைந்தது…..!!
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13 நாட்களில் கோயிலின் வருமானம் 31 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நடை திறக்கப்பட்டு 13 நாட்கள் முடிந்துள்ள நிலையில், கோயிலின் வருமானம் 31 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 13 நாட்களில், 50 கோடியே 58 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது. இந்நிலையில், தொடர் போராட்டங்கள் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து, 19 கோடியே 37 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதேநாளில், கோயில் உண்டியல் மூலம் 17 கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 9 கோடி ரூபாயாக உள்ளது. அரவணை உள்ளிட்ட பிரசாதங்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது.
dinasuvadu.com